பார்த்திபன் மகளை நேரில் சென்று வாழ்த்திய தளபதி

இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் மகளும், தேசிய விருது நடிகையுமான கீர்த்தனா தனது எட்டு ஆண்டு காதலரை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார். இதில் ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். கமல்ஹாசன், ரஜினிகாந்த், எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் முருகதாஸ் படத்தின் ஷூட்டிங் காரணமாக திருமணத்தில் கலந்துகொள்ளாத தளபதி விஜய் நேற்று நேரில் சென்று தம்பதியினருக்குப் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்தினார். உடன் ஸ்ரீகர் பிரசாத்தும், பார்த்திபனும் இருந்தனர்.  

You might also like More from author

%d bloggers like this: