மார்ச் 16 முதல் தமிழ் சினிமா ஷூட்டிங் ரத்து

கியூப், யூஎஃப் போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராக மார்ச் 1 முதல் புதுப்படங்களை ரிலீஸ் செய்வதை நிறுத்தியது தயாரிப்பாளர் சங்கம். இதனால் தியேட்டர்களில் கூட்டம் வரவேயில்லை. பழைய ஹிட் படங்களை ரிலீஸ் செய்து ஒட்டிக் கொண்டிருக்கின்றனர் தியேட்டர்காரர்கள்.

இந்நிலையில், தியேட்டர் உரிமையாளர்கள் 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்; பெரிய திரையரங்குகளில் இருக்கைகளைக் குறைக்க அனுமதி தரவேண்டும்; 3 வருடங்களுக்கு ஒருமுறை லைசென்ஸை புதுப்பிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழக அரசிடம் வைப்பது என முடிவு செய்தனர்.

தமிழக அரசு இதனை ஒப்புக்கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் மார்ச் 16ஆம் தேதி முதல் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை திரையரங்களை மூடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,

”தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்ட்ரைக்கின் படி கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம் நடத்தி வருகிறது. இதன் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கியூப் மற்றும் மற்ற பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வு ஏற்படாததால் வருகிற மார்ச் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்” என்று அறிவித்துள்ளது.

இதன் படி அனைத்து படங்களின் படப்பிடிப்பும் வருகிற 16-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

You might also like More from author

%d bloggers like this: