ரோபோ சங்கருடன் காமெடி செய்யும் அஜித்

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படமான ‘விஸ்வாசம்’ படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். இப்படம் ‘வீரம்’, ‘வேதாளம்’ போன்று கமர்ஷியல் கலவையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யோகிபாபு, தம்பி ராமையா போன்ற காமடியன்களையும் துணைக்கு சேர்த்துள்ளார் சிவா. இந்நிலையில் ரோபோ சங்கரும் இதில் சேர்க்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 5௦ நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் அவர்.

படம் முழுக்க அஜித்தும் ரோபோ சங்கரும் செய்யும் காமெடிகள் வயிற்றைப் பதம் பார்க்குமாம். இதுபற்றி ரோபோ சங்கர் கூறும்போது,

”இதுவரைக்கும் நான் அஜித்தை நேரில் பார்த்தது இல்லை. முதல்நாள் ஷூட்டிங்கில்தான் பார்க்கப் போறேன். பயங்கர எதிர்பார்ப்போடவும், ஆவலுடன் அவரைப் பார்க்கக் காத்திருக்கேன். இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டதற்குப் பலன் கிடைத்திருக்கிறது. ‘மாரி’க்குப் பிறகு அமைந்த மிகப்பெரிய படம் இது. கண்டிப்பா எனக்கு நல்ல பெயர் கிடைக்கும்” என்றார்.

You might also like More from author

%d bloggers like this: