மார்ச் 16 முதல் தியேட்டர்கள் க்ளோஸ் – தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி

கியூப், யூஎஃப் போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராக மார்ச் 1 முதல் புதுப்படங்களை ரிலீஸ் செய்வதை நிறுத்தியது தயாரிப்பாளர் சங்கம். இதனால் தியேட்டர்களில் கூட்டம் வரவேயில்லை. பழைய ஹிட் படங்களை ரிலீஸ் செய்து ஒட்டிக் கொண்டிருக்கின்றனர் தியேட்டர்காரர்கள்.

இந்நிலையில், தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. 180க்கும் மேற்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்; பெரிய திரையரங்குகளில் இருக்கைகளைக் குறைக்க அனுமதி தரவேண்டும்; 3 வருடங்களுக்கு ஒருமுறை லைசென்ஸை புதுப்பிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழக அரசிடம் வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

தமிழக அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட அடிப்படையில், ஒருவார காலத்திற்குள் ஆணை பிறப்பிக்க வேண்டும். அப்படி ஆணை பிறப்பிக்கவில்லை என்றால், மார்ச் 16ஆம் தேதி முதல் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை திரையரங்களை மூடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

You might also like More from author

%d bloggers like this: