மணிரத்னம் ஷூட்டிங்கில் சிம்பு ஓபன் ஸ்டேட்மென்ட் ஒளிப்பதிவாளர்

ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக வராமல் தயாரிப்பளர்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து விடும் ஹீரோ என்று சிம்புவிற்கு கோடம்பாக்கத்தில் பெயர் உண்டு. இதனை தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் புகாரும் உண்மைதான் என நிரூபித்தது.

இந்நிலையில் மணி ரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனிடம் டிவிட்டரில் ஒரு ரசிகர் சிம்புவின் பங்சுவாலிட்டியை பற்றிக் கேட்டிருக்கிறார். அதற்கு ‘’சுவாரசியமான நடிகர்களின் கலவை இப்படம். இயக்குநர் மணிரத்னம் அர்ப்பணிபுமிக்க திறமையான, நேரம் தவறாத நடிகர்களுடன் வளர விரும்புகிறார்என்று கூறியுள்ளார்.

இந்த பதிலில் சிம்புவை திட்டியிருக்கிறாரா இல்லை அவருக்கு சப்போர்ட் செய்கிறாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

You might also like More from author

%d bloggers like this: