தனுஷ் வழியில் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன்

நடிகர் தனுஷ் நடிப்பதோடு இல்லாமல் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என மற்ற ஹீரோக்களின் படங்களையும் தயாரித்துள்ளார். தற்போது கூட விஜய் டிவி தீனா ஹீரோவாக அறிமுகமாகும் படத்தைத் தயாரிக்கிறார் தனுஷ்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இதுவரை நடிகராக மட்டுமே இருந்து வந்த சிவகார்த்திகேயன் தனது கல்லூரி நண்பரும், பாடகரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகும் புதிய படத்தைத் தயாரிக்கிறார்.

கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இந்தப் படம் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் மகளுக்கும், ஆதரவான அப்பாவுக்கும் இடையில் நடக்கும் கதையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கின்றனர்.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், திபு நினன் தாமஸ் இசையில், இளையராஜா கலையில் உருவாகும் இந்தப் படத்தை ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். பல்லவி சிங் ஆடை வடிவமைப்பாளராகவும், வின்சி ராஜ் டிசைனராகவும் பணிபுரிகிறார்கள்.

You might also like More from author

%d bloggers like this: