‘’நடிப்பிற்கு முழுக்கா.. கிடையவே கிடையாது…’’ – கமல் உறுதி

கமல்ஹாசன் தற்போது அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்டார். பிப்ரவரி 21ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார். இந்த நிலையில் அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘விஸ்வரூபம் 2’, ‘இந்தியன் 2’ என இந்த இரண்டு படங்கள்தான் என் கடைசிப் படங்கள். இதன் பின் எந்தப் படங்களிலும் நடிக்கப் போவதில்லை. முழுக்க முழுக்க அரசியல்தான். மக்கள் சேவைதான்’’ என கூறியதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அந்த தகவலை உடனடியாக மறுத்திருக்கிறது கமல் ஹாசன் தரப்பு. ‘’சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என்று வந்த செய்தி உண்மையில்லை. அரசியல் கட்சி தொடங்கிய பின் அதைனைப் பற்றி முடிவு செய்யப்படும்’’ என்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

You might also like More from author

%d bloggers like this: