ரன் பட நாயகியா இது..?? ரசிகர்கள் அதிர்ச்சி!

மலையாள திரையுலகில் கால் பதித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் மீரா ஜாஸ்மின். ரன் படத்தின் மூலம் தமிழுக்கு அடியெடுத்து வைத்தார்.

‘சண்டக்கோழி’ படம் அவரது மார்க்கெட்டை மேலும் உயர்த்தியது. விஜய்யின் புதிய கீதை, அஜித்தின் ஆஞ்சனேயா, ஆயுத எழுத்து, திருமகன், பரட்டை என்கிற அழகு சுந்தரம், பெண் சிங்கம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மீரா ஜாஸ்மின் 2014-ல் துபாய் என்ஜினீயரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக தமிழ், மலையாள டைரக்டர்களிடம் கதை கேட்டு வருகிறார். மோகன்லாலுடன் புதிய படத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருமணத்துக்கு பிறகு மீரா ஜாஸ்மின் எடை கூடியிருக்கிறார். தற்போது அவர் பருமனாக இருக்கும் தோற்றம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் மீரா ஜாஸ்மினா இது… இப்படி ஆகி விட்டாரே என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

You might also like More from author

%d bloggers like this: