நடிப்பிற்கு முழுக்கு போட்ட கமல்..

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரம். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரம் எதுவும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

படத்தின் கதாபாத்திரமாகவே மாறி அப்படத்திற்கு ஒரு புத்துணர்ச்சியை அளிப்பார்.
இவர் தற்போது சினிமாவை தாண்டி அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.

இந்த நிலையில் ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர், வெளிவர இருக்கும் இரு படங்கங்களான ‘விஸ்வரூபம்-2’, மற்றும் ‘இந்தியன்-2’ படத்தினை தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் தீவிர அரசியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த இரு படங்களோடு சினிமாவிற்கு முழுக்கு போட கமல் உள்ளதால் அவரது ரசிகர்கள் சற்று ஏக்கத்தில் உள்ளனர்.

You might also like More from author

%d bloggers like this: