காலா இயக்குனரின் அடுத்த படைப்பு!

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மிகவும் அதிக எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது ‘காலா’. படம் வரும் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்திற்கு ‘பரியேறும் பெருமாள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குனர் ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். கதிர், ஆனந்தி, கலையரசன் உள்பட பலர் நடிக்கும் இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.

You might also like More from author

%d bloggers like this: