‘’பச்சோந்திகளுடன் கூட்டணி வைக்காதீர்…!’’ – கமலுக்கு கஸ்தூரி வேண்டுகோள்

கமல்ஹாசன் வரும் 21-ந்தேதி ராமேசுவரத்தில் கட்சி பெயரை அறிவித்து தமிழகம் முழுவதும் அரசியல் பயணத்தை தொடங்குகிறார். ரஜினிகாந்தும் ஓரிரு மாதங்களில் தனி கட்சி தொடங்குகிறார். ‘’ரஜினியுடன் கூட்டணி வைப்பீர்களா…?’’ என்ற கேள்விக்கு ‘’ரஜினியின் அரசியல் காவியாக இருக்காது என்று நம்புகிறேன். காவியாக இருக்குமானால் அவருடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை’’ என்று கமல் கூறினார்.

ரஜினியின் ஆன்மீக அரசியல் என்பதே பிஜேபியின் இன்னொரு வடிவம்தான் என்று பேசப்படுகிறது. இதனைத்தான் கமல் மறைமுகமாகக் கூறியதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இந்தநிலையில் கமல் கருத்துக்கு நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.

காவியாக இருந்தாலென்ன? கறுப்போ சிவப்போ என்றால்தான் என்ன? நிலைமைக்கு தகுந்தபடி நிறம் மாறும் பச்சோந்திகளுடன் சேருவதுதான் கூடாதுஎன்று அவர் கூறியிருக்கிறார். 

You might also like More from author

%d bloggers like this: