பழைய ஃபார்முக்கு வந்த விமல் இனி அதிரடி ஆட்டம்

மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வந்தவர் தான் விமல். ஆனால் அவர் கடைசியாக நடித்த சில படங்கள் தோல்வியடையவே யோசித்தவர் புதிய படங்களை கமிட் செய்யாமல் கொஞ்சம் இடைவெளி விட்டார். பூபதி பாண்டியன் இயக்கத்தில் ‘மன்னர் வகையறா’வை நடித்து சொந்தமாகத் தயாரித்தார்.

படம் வெளிவந்து சுமார் ஹிட்டடித்து இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் தெம்பான விமல் ஒரே வருடத்தில் தொடர்ந்து ஐந்து படங்களில் நடித்து பழையபடி வேகம் காட்டப் போகிறாராம். தற்போது சற்குணம் இயக்கத்தில் ‘களவாணி’ இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார்.

You might also like More from author

%d bloggers like this: