கதற விட்ட சிம்பு மீண்டும் ‘ஒன்றாக’ சேரும் கவுதம் மேனன்

தொடர்ந்து அதிரிபுதிரி ஹிட் படங்களை கொடுத்து டிரென்ட் செட் டைரக்டராக வலம் வந்த கவுதம் மேனன் சிம்புவை வைத்து ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தை இயக்கினார். மற்ற படங்களில் ஷூட்டிங் வராமல் டிமிக்கிக் கொடுக்கும் சிம்பு நல்ல புள்ளையாக விடிவியை முடித்துக் கொடுத்தார். படமும் பம்பர் ஹிட்.  

அதே கவுதம் மேனன் தொடர் தோல்வியின்போது அதே சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்க, ஷூட்டிங் வராமல் சில மாதங்களில் முடிய வேண்டிய படத்தை இரண்டரை வருடங்கள் இழுத்தடித்து கவுதமை கதற விட்டார் சிம்பு. படம் முடிந்தபோது இனி ‘சிம்புவை இயக்குவது மடமையடா’ என்ற ரேஞ்சில் மன உளைச்சலுக்கு ஆளானார் கவுதம்.

இந்நிலையில் சினிமாவில் எதுவும் சாத்தியம்போல மீண்டும் சிம்புவை இயக்குகிறார் கவுதம். விடிவி இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்திற்கு ‘ஒன்றாக’ என்று தலைப்பு வைத்துள்ளார். ஆனால் இப்படத்தில் சிம்பு மட்டுமில்லாமல் இன்னும் மூன்று ஹீரோக்களும் சேர்ந்து நடிக்கிறார்களாம்.

You might also like More from author

%d bloggers like this: