‘’வாழ்க்கை ஒரு வட்டம்டா…?’’ – நிரூபித்த தளபதி விஜய்

பொதுவாக ரீமேக் படங்கள் என்பது 9௦ சதவீத வெற்றியை தீர்மானித்து விடும். இதனால் பிற மொழிகளில் ஹிட்டடித்தப் படங்களை தமிழில் ரீமேக் செய்வது வழக்கம். இது மற்ற மொழித் திரையுலகத்திற்கும் பொருந்தும். ஆனானப்பட்ட ரஜினிகாந்தே சூப்பர் ஸ்டார் ஆனது ரீமேக் படங்களில் நடித்துத்தான் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. அவர் நடித்த படங்களில் கிட்டத்தட்ட 9௦ சதவீதப் படங்கள் ரீமேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலங்களில் தளபதி விஜய்யும் இதனை ஃபாலோ செய்தார். ஆனால் அவரை ரீமேக் ஹீரோ என்று கிண்டல் செய்தனர். அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் கடுமையான உழைப்பின் மூலம் இன்று சூப்பர் ஸ்டாராகிவிட்டார் விஜய்.

‘’வாழ்க்கை ஒரு வட்டம்டா’’ என்று ‘திருமலை’ படத்தில் அவர் பேசிய பன்ச் டயலாக் இன்று அவருக்கேப் பொருந்தியுள்ளது. விஷயம் இதுதான். அட்லீ இயக்கத்தில் தளபதி நடித்த ‘தெறி’ படத்தின் ஹிந்தி டப்பிங் யூ டியூபில் சாதனை படைத்துள்ளது.

இப்படத்தைச் சுமார் 5 கோடி பேர் கண்டு ரசித்திருக்கிறார்கள். இதுவரை எந்தவொரு இந்தி டப்பிங் செய்யப்பட்ட தமிழ் படமும் இச்சாதனையை நிகழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author

%d bloggers like this: