பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்யலாம்… ஐகோர்ட் அதிரடி!

படவிழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, வைரமுத்துவிற்கு தலைகுனிவு ஏற்படும் வகையில் நடந்தால் பிறர் தலையை எடுக்கவும் தயங்க மாட்டேன் என வன்முறையை தூண்டும் விதமாக பேசினா. கடவுள் விநாயகரை இறக்குமதி கடவுள் எனவும் குறிப்பிட்டார் பாரதிராஜா.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் நாராயணன் என்பவர் போலீஸில் புகார் அளித்தார். அங்கு புகாரை வாங்க மறுக்கப்பட்டதால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் நாராயணன்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டும் விதத்தில் பேசிய பாரதிராஜா மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என கோர்ட் உத்தரவிட்டது.

You might also like More from author

%d bloggers like this: