ஆதிக் – ஜி வி கூட்டணி எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க்!

 

தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு திரைப்படம் 2D அல்லது 3D தொழில்நுட்பத்தில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்முறையாக ஒருதிரைப்படம் முதல் பாதி 2D தொழில்நுட்பத்திலும், இரண்டாம் பாதில் 3D தொழில்நுட்பத்திலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சிம்புவின் AAA படத்திற்கு பிறகு இயக்குனர் ஆதிக் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோவாக ஜி வி பிரகாஷ் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் கதைப்படி முதல் பாதி 2D தொழில்நுட்பத்திலும் இரண்டாம் பாதி 3D தொழில்நுட்பத்திலும் உருவாக்கப்படவிருப்பதால் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ் சினிமாவில் முதன்முதலில் புகுத்தப்பட்ட இந்த புதுமை ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

You might also like More from author

%d bloggers like this: