‘’டயர் வண்டி கூட ஓட்டத் தெரியலையாப்பா…?’’ – அஜித்தைக் கலாய்த்த மகள்

‘தல’ அஜித் ரேஸ் பிரியர் என்பது தமிழ் நாட்டிற்கே தெரியும். பைக் ரேசாக இருந்தாலும் சரி கார் ரேசாக இருந்தாலும் சரி உயிரைப் பணயம் வைத்தாவது அதில் கலந்து கொள்வார். ரேசிற்காக சினிமாவைக் கூட தலைமுழுக நினைத்தவர் ரசிகர்களுக்காக சினிமாவிற்கே திரும்பி வந்தார். அது மட்டுமில்லாமல் பைலட் லைசன்ஸ் பெற்றிருக்கும் ஒரே தமிழ் நடிகர் என்ற பெருமையையும் அஜித் பெற்றிருக்கிறார்.

ஆனால் தற்போது ‘’டையர் வண்டி கூட ஓட்டத் தெரியலையே…?’’ என்று கலாய்க்கும் நிலைக்கு வந்துள்ளார் அஜித். ஆம். கலாய்த்தவர் அவரது செல்ல மகள் அனோஷ்கா. தனது மகளின் பள்ளி விழாவில் கலந்து கொண்ட அஜித் தனது மகளுடன் டையர் வண்டி ஓட்டும் போட்டியில் கலந்து கொண்டார். ஆனால் பாதியிலேயே ஓட்ட முடியாமல் டையரை கீழே விட்டார். அதனைப் பார்த்த அனோஷ்கா அவரை கலாய்த்து பயங்கரமாக சிரிக்கும் வீடியோ இன்று வைரலாகிக் கொண்டிருக்கிறது.

You might also like More from author

%d bloggers like this: