‘’நான் சினிமாவில் நடிக்கிறேனா…?’’ – சத்யராஜ் மகள் விளக்கம்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு ஊட்டச் சத்து நிபுணர். ஒன்றரை வருடங்களுக்கு முன் வெளிநாட்டைச் சேர்ந்த சில விஷமிகள் மக்களுக்குக் கெடுதல் விளைவிக்கும் ஊட்டச் சத்துப் பொருளை தமிழ் நாட்டில் விற்பதற்கு உதவுமாறுக் கேட்டதற்கு தைரியமாக ”முடியாது” என்று அவர்களை விரட்டி விட்டதுடன் அவ்விஷமிகளை பற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் அவர் சினிமாவில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வந்தது. இது தொடர்பாக திவ்யா சத்யராஜ் வெளியிட்ட செய்தியில்,

”நான் ஏழு ஆண்டுகளாக ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறேன். சென்னையில் உள்ள இரு கிளினிக்குகளில் பணியாற்றி வருவதோடு, ஊட்டச்சத்து குறித்த பி.எச்.டி படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.

இந்நிலையில், நான் திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறி சில செய்திகள் சமூக வலைதளங்களில் வந்துள்ளன. இதில் துளியும் உண்மையில்லை. நான் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.

திரைப்படத்துறையை நான் பெரிதும் மதிக்கிறேன். திரைப்படங்கள் பார்ப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் நான், நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த ஒரு ஆவணப்படத்தில் நான் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன். ஆனால், திரைப்படங்களில் நடிக்க ஒருபோதும் விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

You might also like More from author

%d bloggers like this: