‘’ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை’’ – கமல் உறுதி

சினிமாவிலிருந்ததை விட அதிக பரபரப்புக்குள்ளாகியிருக்கிறார்கள் உலக நாயகன் கமல்ஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும். காரணம் இருவரின் அரசியல் பிரவேசம்தான். இந்நிலையில் தான் அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் பிசினஸ் ஸ்கூல் ஆப் நிகழ்ச்சியிலும், வருடாந்திர இந்திய மாநாட்டிலும் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார். தமிழரின் பாரம்பரிய வேட்டி, சட்டையில் நிகழ்ச்சிக்கு வந்த கமல்ஹாசனை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராகப் பங்கேற்று நடிகர் கமல்ஹாசன் பேசியபோது,  ‘’ரஜினிகாந்துடன் அரசியல் கூட்டணி வைப்பீர்களா…?’’ என கேட்கப்பட்டது.

அதற்கு கமல் பதிலளித்துப் பேசுகையில், ”நானும், ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்கள். ஆனால், அரசியல் என்பது வேறு. என்னுடைய நிறம் கறுப்பு, நடிகர் ரஜினியின் நிறம் காவியாக இருக்காது என நம்புகிறேன். அப்படி ஒருவேளை ரஜினி அரசியலின் நிறம் காவியாக இருந்தால், அவர் அதை மாற்றிக்கொள்ளாவிட்டால், அவருடன் நான் கூட்டணி வைக்கமாட்டேன்’’ என்று உறுதியாகக் கூறினார்.

You might also like More from author

%d bloggers like this: