அஜித்திற்காக தனது கொள்கையை விட்டு கொடுத்த இமான்!

வீரம், வேதாளம் மற்றும் விவேகம் படத்தினை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் சிவாவோடு கூட்டணி வைத்திருக்கிறார் அஜித்.

இப்படத்திற்கு விஸ்வாசம் என டைட்டில் வைத்துள்ளது படக்குழு. மேலும், நயன்தாரா இப்படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.

இசையமைப்பாளரக அனிருத், யுவன் மற்றும் சாம் என பல கைகள் மாறி வந்த நிலையில் கடைசியாக இமானிடம் சென்றுள்ளது படக்குழு.

வெட்டுக்குத்து இல்லாத கதைக்கு மட்டுமே இமான் இசையமைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால், விஸ்வாசம் படத்தில் அதிகமான சண்டைக் காட்சிகள் இடம்பெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், அஜித் படத்திற்கு இசையமைப்பது தனது கனவு என்று கூறி இப்படத்திற்கு இசையமைக்க இமான் தனது கொள்கையை தகர்த்தெறிந்து ஒப்புக்கொண்டுள்ளாராம்.

You might also like More from author

%d bloggers like this: