‘என்னை அறிந்தால் 2’ மீண்டும் அஜித் கவுதம் காம்பினேசன் சாத்தியமா…?

தற்போது விக்ரமை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் முதலில் நடிக்க வேண்டியவர் சூர்யாதான். ஆனால் கவுதம் மேனனின் படத்தில் நடிக்கவில்லை என்று பிரெஸ் ரிலீஸ் அளித்து கடைசி நேரத்தில் கழுத்தை அறுத்தார் சூர்யா. ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ என்ற இரண்டு படங்களின் மூலம் சூர்யாவின் சினிமா கேரியரையே உச்சத்துக்குக் கொண்டு போன தனக்கே துரோகம் செய்துவிட்டாரே என்று மன உளைச்சல் அடைந்தார் கவுதம் மேனன். அந்த நேரத்தில் அஜித்தே அழைத்து ‘என்னை அறிந்தால்’ வாய்ப்புக் கொடுத்தார் அஜித்.

ஆனால் ஆரம்பத்தில் நன்றாகப் போய்க் கொண்டிருந்த அஜீத கவுதம் நட்பு போகப் போக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகப் பேசப்பட்டதுண்டு. அதுவும் என்னை அறிந்தாலின் அஜித் இறந்துவிடுவது போல இருந்த க்ளைமாக்சை அஜித் மாற்றச் சொல்ல, அதற்கு கவுதம் மேனன் மறுத்துவிட்டாராம். அதற்குப் பின் ஏற்பட்ட பேச்சு வார்த்தையினால் பாசிட்டிவ் க்ளைமாக்ஸ் எடுத்தாராம் கவுதம்.

இதனால் மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பாரா என்ற சந்தேகம் இருக்கிறது. இந்நிலையில்தான் கவுதம் மேனன் விரைவில் ‘காக்க காக்க’ அல்லது ‘வேட்டையாடு விளையாடு’ படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாகக் கூறி வருகிறார்.

ஒருவேளை ‘காக்க காக்க 2’ செய்தால் கூட ‘என்னை அறிந்தால் 2’ சாத்தியமா என்பது மிகப் பெரிய கேள்வி.

You might also like More from author

%d bloggers like this: