‘கலகலப்பு 2’ – விமர்சனம்

ஆறு வருடங்களுக்கு முன் சுந்தர் சி இயக்கி வெளிவந்து மாபெரும் வெற்றிப் பெற்ற படம்தான் ‘கலகலப்பு’. தற்போது அதே சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி, யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ், மனோபாலா, சிங்கமுத்து, மது சூதனன், விடிவி கணேஷ், சிங்கம்புலி, சந்தான பாரதி என நடிகர் சங்கமே நடித்து வெளிவந்துள்ள படம்தான் ‘கலகலப்பு 2’.

கதை

தன்னுடைய பூர்வீக சொத்தைத் தேடி காசிக்கு வருகிறார் ஜெய். அந்த இடத்தில்தான் லீஸுக்கு லாட்ஜ் நடத்தி வருகிறார் ஜீவா. ஒரு பக்கம் ஜெய் தன்னுடைய பூர்வீக இடத்தை கண்டுபிடிப்பதற்குள் நிக்கி கல்ராணியுடன் காதலில் விழுகிறார். இன்னொருபுறம், ஜீவா தன் தங்கைக்கு திருமணம் நிச்சயம் செய்யும் கேப்பில் கேத்ரின் தெரஸாவுடன் காதல் வலையில் சிக்குகிறார். இப்படியெல்லாம் போய்க் கொண்டிருக்கும் வேளையில்தான் ஜெய்யிற்கு ஒரு உண்மை தெரிய வருகிறது. ஜீவா நடத்தி வரும் லாட்ஜ் தான் தன்னுடைய பூர்வீக சொத்து என்பதும், ஜீவா தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதும். ஆனாலும் ஜீவாவின் நிலையை உணரும் ஜெய் அவருடன் நட்பாகிறார்.

ஆனால் இருவருமே ஒரு பொதுவான ஆளிடம் ஏமாந்த விஷயத்தைப் பகிர, அந்த எதிரியை தேடிக் கண்டுபிடித்துத் தாங்கள் ஏமாந்த பணத்தை மீட்க முடிவு செய்கின்றனர். அந்த பொது எதிரிதான் மிர்ச்சி சிவா. இருவரும் சிவாவை கண்டுபித்தார்களா, தங்கள் பணத்தை மீட்டார்களா எனபதே மீதிக்கதை.

இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் தான் ஒரு காமெடி ஜீனியஸ் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி. முதல் பாகத்தின் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள கடுமையாக உழைத்துள்ளார். எந்த விதத்திலும் படம் பார்க்க அவரும் ஆடியன்சின் திருப்தி ஒரு சதவீதம் கூட குறையக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்துள்ளார். சொந்தத் தயாரிப்பு என்றாலும் சிக்கனம் பார்க்காமல் பிரம்மாண்டமாக எடுத்துள்ளார்.

ஜீவா, ஜெய் இருவருக்குமே சமமான கேரக்டர். இவர்களும் தாங்கள் ஹீரோ என்பதையெல்லாம் மறந்து ஜாலியாக விளையாடியிருக்கின்றனர். மிர்ச்சி சிவா வழக்கம்போல தன்னுடைய போங்கு ஆட்டத்தால் கவர்கிறார்.

கேதரின் தெரசாவும், நிக்கி கல்ராணியும் போட்டிப் போட்டுக் கொண்டு கவர்ச்சிக் காட்டியுள்ளனர்.

படத்தில் உச்ச பட்ச ஸ்கோர் செய்வது யோகி பாபு, விடிவி கணேஷ், சிங்கமுத்துவும்தான். படம் முழுக்க தெறிக்க விடுகிறார்கள்.

சதீஷ், சிங்கம் புலி, ரோபோ சங்கர், ராதாரவி, முனீஸ்காந்த், மனோபாலா, சந்தான பாரதி, மதுசூதனன் என அனைவருமே ரசிகர்களை சிரிக்க விடுவதையே நோக்கமாகக் கொண்டு நடித்துள்ளனர்.

ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் சுமார் தான். அதைக் காட்சிப்படுத்திய விதத்தில் செம கிரேஸ் ஏற்படுத்துகிறார் யு.கே.செந்தில் குமார்.

முதல் பாதியில் ஓகே என்ற அளவில் இருக்கும் படத்தை இரண்டாம் பாதியில் சஞ்சுரி அடிக்க வைத்துள்ளார் சுந்தர் சி. அதுவும் க்ளைமாக்ஸ் தியேட்டரே அதக்களமாகிறது.

மொத்தத்தில்

‘கலகலப்பு 2’ – டபுள் டமாக்கா காமெடி திருவிழா

You might also like More from author

%d bloggers like this: