‘’ஆண்டவன் அருளால் மக்களுக்கு என் பணியை தொடர்வேன்’’ – நெகிழச்சியில் இளையராஜா

தமிழ் சினிமாவில் இசைக் கடவுளாக மக்களால் போற்றப்படுபவர் இளையராஜா. அவருக்கு விருதுகள் என்பதே அப்பாற்பட்ட விஷயம்தான். ஆனாலும் அவருக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருதை அளிப்பதன் மூலம் அந்த விருதுக்கு பெருமை சேர்த்துள்ளது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்ட அனைத்து பிரபலங்களும் பாராட்டிய நிலையில் நாட்டின் பல திசைகளில் இருந்து இளையராஜாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இதனால் நெகிழ்ந்த இளையராஜா

‘’எனக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து, இன்றுவரை என்னை நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், மனப்பூர்வமாகவும் வாழ்த்து தெரிவித்த உலகெங்கிலும் பரவி இருக்கும் இசை ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர், தொழில் துறையினர், ஊடகத் துறையினர் அனைவருக்கும் நன்றி. விருது அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கானவர்கள் தினமும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வாழ்த்தும், அன்பும் எனக்கு மேன்மேலும் உத்வேகத்தைத் தந்துள்ளது. என்னை நெகிழ வைத்துள்ளது. ஆண்டவனின் அருளாலும், உங்கள் அன்பாலும், மக்களுக்காக என் பணியை செவ்வனே செய்து கொண்டு இருப்பேன்’’ என உணர்வுப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

You might also like More from author

%d bloggers like this: