‘விஸ்வாசம்’ அஜித்தின் அதிரடி முடிவு

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களுக்குப் பிறகு அஜித் நடிப்பில் சிவா இயக்கும் படம்தான் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த வருடம் தீபாவளிக்கு விஜய் முருகதாஸ் படத்தோடு மோதப் போகிறது ‘விஸ்வாசம்’. ஆனாலும் இதுவரை ‘விஸ்வாசம்’ படத்தைப் பற்றிய எந்த அதிகாரப் பூர்வத் தகவலும் வரவில்லை.

ஆனால் பிப்ரவரி 22 ஆம் தேதி இதன் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிக்கு ரிலீஸ் என்றாலும் ‘விஸ்வாசம்’ படத்தின் மொத்த ஷூட்டிங்கையும் ஐந்தே மாதங்களில் முடிக்க வேண்டும் என்று அஜித் சிவாவிற்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்குக் காரணம் ‘விவேகம்’ தோல்விக்குப் பின் அஜித் இனி வருடத்திற்கு ஒரு படம் நிச்சயம் ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று புதிய முடிவு ஒன்று எடுத்திருக்கிறாராம்.

You might also like More from author

%d bloggers like this: