‘ஸ்கெட்ச்’ – விமர்சனம்

‘இருமுகன்’ வெற்றிக்குப் பிறகு அவ்வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கும் விக்ரம் ‘வாலு’ விஜய் சந்தர் இயக்கத்தில் நடித்திருக்கும் படம்தான் ‘ஸ்கெட்ச்’. இதில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

வட்டிக்கு பணம் வாங்கிவிட்டுத் திருப்பித் தராதவர்களின் வண்டியை சீஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார் சேட்டு. அவரிடம் ஸ்கெட்ச் போட்டு பைக், காரை அசால்ட்டாகத் தூக்கி வரும் கிட்டத்தட்ட ரவுடி மாறியான வேலையை சேது வருகிறார் விக்ரம். அவரிடம் சேட்டு வில்லனின் காரைத் தூக்கி வரச் சொல்ல, ஸ்கெட்ச் போட்டுத் தூக்குகிறார் விக்ரம். இதனால் கோபமாகும் வில்லன் விக்ரமையும், அவர் நண்பர்கள் மூன்று பேரையும் கொல்ல சபதமெடுக்கிறார். வில்லனின் சபதத்தை விக்ரம் முறியடித்தாரா இல்லையா என்பதே மீதிக்கதை.

விக்ரமிற்கு ஜெமினி போல ஒரு மாஸ் மசாலா படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருப்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் அந்த முயற்சிகளெல்லாம் ராஜபாட்டை, பத்து எண்றதுக்குள்ள என்று படுதோல்விகளாகவே அமைவதுதான் பரிதாபம். இந்த வரிசையில் ஸ்கெட்ச்சும் சேர்ந்திருப்பதுதான் கொடுமை.

வாலு என்ற தனது முதல் படத்தில் உழைத்த அளவிற்குக் கூட திரைக்கதையிலோ மேக்கிங்கிலோ உழைக்காமல் தேமே என அசால்ட்டாக இருந்திருக்கிறார் விஜய் சந்தர். முதல் பாதி முழுக்க நிஜமாகவே நமக்குக் குறட்டை விட்டுத் தூங்கும் அளவுக்கு பார்த்து சலித்த சீன்கள். இன்டர்வலில் நிமிர்ந்தால் இரண்டாம் பாதியிலும் நாம நிறையப் பார்த்த, நமக்கே அடுத்து இதான் நடக்கப் போகுதுன்னு கணிக்க வைக்கிற பழைய ஃகிளிஷேக்களே நிரம்பி வழிகின்றன. ஆனாலும் அந்த க்ளைமாக்ஸ் டிவிஸ்டும், அதில் சொல்லப்படும் கருத்தும் விஜய் சந்தரை பாராட்ட வைக்கின்றன.

விக்ரம். ஜெமினி போல ரொமான்ஸ், மாஸ், டான்ஸ், ஃபைட் என்று அதக்களப்படுத்துகிறார். இருந்தாலும் சிங்கத்திற்கு தயிர் சாதம்தான்.

படத்தில் நம்மை அங்கங்கே நிஜமாகவே நிமிர வைப்பது வெள்ளைப் பளிங்கு அழகி தமன்னாதான். சேலையில் கூட கிளாமர் கிக் ஏற்றி நம்மை பரவசத்தின் உச்சிக்கே அழைத்துச் செல்கிறார். ஹோம்லி லுக்கிலும் படம் முழுக்க நம்மை பாடாய்படுத்துகிறார்.

ஸ்ரீமன், வினோத், விஸ்வந்த். சேட்டு கேரக்டர், வில்லன், வேல ராமமூர்த்தி என எல்லோரும் இருக்கிறார்கள்.

திடீர் சர்ப்ரைஸ் தமன்னாவின் தோழியாக வரும் ப்ரியங்காதான். கச்சிதம்.

தமனின் இசையில் பாடல்களும் கேட்டு சலித்த ரகம். பின்னணி இசை புளித்த ராகம்.

சுகுமாரின் ஒளிப்பதிவு ஓகே.

மொத்தத்தில்

‘ஸ்கெட்ச்’ – மிஸ் ஆகிவிட்டது.

You might also like More from author

%d bloggers like this: