‘தானா சேர்ந்த கூட்டம்’ – விமர்சனம்

கடைசியாக சூர்யா நடித்த ‘அஞ்சான்’. ‘மாசு என்கிற மாசிலாமணி’, ‘24’, ‘சிங்கம் 3’ படங்கள் ரசிகர்களை ஏமாற்றிவிட, இந்த முறை ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படம் ‘ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக்காகும்.

19௮௦ களில் கதை ஆரம்பிக்கிறது. சூர்யா சிபிஐ ஆகவேண்டும் என்ற கனவோடு வேலை தேடும் பட்டதாரி. அவர் நண்பர் கலையரசன் போலீஸ் அதிகாரியாக ஆசைப்படும் பட்டதாரி. ஆனால் அதிகார வர்க்கத்தின் லஞ்ச பேர ஆசையால் அவர்களின் கனவு சிதைய, கலையரசன் தற்கொலை செய்து கொள்ள, ஆவேசமாக எழும் சூர்யா எப்படி அதற்கு எதிர்வினையாற்றுகிறார் என்பதே பரபர விறுவிறு ஜாலி மேளா.

படத்தில் முதல் பாராட்டிற்குச் சொந்தமானவர் விக்னேஷ் சிவன்தான். இதுவரை உடம்பை முறுக்கிக் கொண்டு, திமிறிக் கொண்டு, குரல் உயர்த்திக் கொண்டு ஸ்ட்ரிக்ட் ஆபிசராகவே வலம் வந்த சூர்யாவை இதில் அழகான ஜாலியான கேஷுவல் சூர்யாவை காட்டியதன் மூலமே ஜெயித்துவிட்டார் விக்னேஷ் சிவன். ஸ்பெஷல் 26ஐ அப்படியே ரீமேக்காமல் தமிழுக்கு ஏற்றவாறு முதல் பாதியிலும், க்ளைமாக்சிலும் நிறைய மாற்றங்களை செய்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அதேபோல் விக்னேஷ் சிவனின் அதிகாரவர்க்கத்தை நோக்கி எழுப்படும் வசனங்கள் செம சூடு.

சூர்யா. இப்படி ஒரு சூர்யாவை பார்த்து எவ்வளவு நாளாச்சு என்று பரவசப்பட வைத்திருக்கிறார். ஸ்ட்ரிக்ட் ஆபிசர், ஜாலி கேலி இளைஞன், அதிகாரிகளின் அவலட்சணங்களை பார்த்து சீரும் பட்டதாரி, கீர்த்தியை செல்லமாக சீண்டும் காதலன் என எல்லா தளத்திலும் சிக்சர் அடித்துள்ளார் சூர்யா.

சூர்யாவிற்கு அடுத்து ரம்யா கிருஷ்ணன் அசத்தல். கம்பீர போலி சிபிஐ, நடுத்தரக் குடும்பப் பெண்மணி என இரண்டிலும் அசத்தலான வேறுபாட்டைக் காட்டி தான் ஒரு அன்பவ நடிகை என்பதை பறைசாற்றுகிறார்.

கீர்த்தி சுரேஷ் வழக்கம்போல ஹீரோவை காதலிக்கும் அழகான பதுமை. பாடல்களில் கிக் ஏற்றுகிறார்.

படத்தின் மிகப் பெரிய பலம் சுரேஷ் மேனன் கேரக்டரும், அவருக்கு ஒத்துழைத்த கௌதம் மேனனின் குரலும் நச்.

கார்த்திக்கு பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும் கிடைட்த்ஹா கேப்பில் ரசிக்க வைக்கிறார்.

கலையரசன், தம்பி ராமையா, செந்தில், சிவசங்கர் மாஸ்டர், பிரம்மானந்தா என நிறைய நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் எல்லாருக்குமே ஸ்கோர் செய வாய்ப்பு.

ஆனந்தராஜும், ஆர்.ஜே பாலாஜியும் படத்தின் கலகல அனுபவத்திற்குப் பயன்பட்டிருக்கிறார்கள்.

அனிருத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கொண்டாட வைக்கின்றன.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், கிரணின் ஆர்ட் டைரக்ஷனும் நல்உழைப்பை நல்கியிருக்கின்றன.

மொத்தத்தில்

‘தானா சேர்ந்த கூட்டம்’ – ஜெயிக்கிற கூட்டம்.

You might also like More from author

%d bloggers like this: