விஸ்வாசத்திற்கு இசை அனிருத் – திகிலில் அஜித் ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களில் ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்கள் வெற்றியும் ‘விவேகம்’ தோல்வியும் அடைந்தன. ‘விவேகம்’ படத்தின் பாடல்கள் பெரும் வெற்றிப் பெற்றிருந்தாலும் படத்தின் தோல்விக்கு அனிருத்தின் பின்னணி இசையும் ஒரு காரணம் என்று அஜித் ரசிகர்களால் கூறப்பட்டது.

இந்நிலையில் சிவா அஜித்தின் அடுத்த படமான ‘விஸ்வாசம்’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்தனர். திடீரென யுவன் அப்படத்திலிருந்து விலகினார். ‘விக்ரம் வேதா’ புகழ் சி.எஸ்.சாம் பெயர் அடிபட்டது. ஆனால் தற்போது அனிருத்தான் விஸ்வாசத்திற்கு இசையமைப்பாளர் என்று இயக்குனர் சிவா முடிவு செய்துவிட்டதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தாலும் பொங்கல் தினத்தன்று யார் இசையமைப்பாளர் என்று தெரிந்துவிடும்.

You might also like More from author

%d bloggers like this: