மீண்டும் இணையும் நட்புக் கூட்டணி விரைவில் ‘நாடோடிகள் 2’

தமிழ் திரையுலகில் உண்மையான நண்பர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த எண்ணிக்கையில் இருப்பவர்கள்தான் சசிகுமாரும், சமுத்திர கூட்டணியும். இருவரும் இணைந்து ‘சுப்ரமணியபுரம்’, ‘நாடோடிகள்’, ‘போராளி’, ‘அப்பா’ என பல படங்களில் இணைந்துள்ளனர்.

இதில் ‘நாடோடிகள்’ படமும் பெரும் வெற்றியும் பெற்று, விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. இந்தப் படத்தை சமுத்திர கனி இயக்கியிருந்தார். சசிகுமார் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில் ‘நாடோடிகள்’ இரண்டாம் பாகத்தை சமுத்திர இயக்க, சசிகுமார் நடிக்கிறார். பிப்ரவரியில் ‘நாடோடிகள் 2’ படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. இயக்குவதோடல்லாமல் இப்படத்தைத் தயாரிக்கவும் செய்கிறார் சமுத்திர கனி.  

You might also like More from author

%d bloggers like this: