‘’மக்களிடம் பணம் வசூலிப்பது அஜீத்திற்குப் பிடிக்கவில்லை…?’’ – எஸ்.வி.சேகர் ஓபன் டாக்

நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் மலேசியாவில் நட்சத்திர கலைவிழா சிறப்பாக நடைபெற்றது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில் விஜய், அஜித் இருவரும் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் கலைவிழாவில் உரிய மரியாதை தரவில்லை என்றுகூறி டிரஸ்டி பதிவியிலிருந்து விலகினார்.

இந்த விஷயம் தொடர்பாக சென்னையில் இன்று தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த எஸ்.வி.சேகர்

”நடிகர் சங்க கட்டிடத்துக்கு மக்களிடமிருந்து பணம் வசூலிப்பதை அஜித் விரும்பவில்லை. மலேசிய நட்சத்திரக் கலைவிழாவில் பங்கேற்க வேண்டும் என்று நடிகர் சங்கம் சார்பில் அஜித்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அஜித் அதை விரும்பவில்லை.

மக்கள் படம் பார்ப்பதற்காக தியேட்டரில் டிக்கெட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். அதன்மூலம்தான் நாம் சம்பாதிக்கிறோம். அதனால் நடிகர் சங்க கட்டிடத்துக்கு நடிகர்களாகிய நாமே நிதி அளிக்கலாம். அதைத் தவிர்த்து ஏன் நட்சத்திரக் கலைவிழா நடத்தி மக்களிடம் பணம் வசூலிக்க வேண்டும் என்று அஜித் கேட்டார்” என தெரிவித்தார்.

You might also like More from author

%d bloggers like this: