ஜீவாவின் இரு படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸ்

‘கோ’ படத்திற்குப் பின் ஒரு வெற்றிப் படம் கூட தரமுடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறார் ஜீவா. ஆனாலும் ஜீவாவின் மீது ரசிகர்களும் அறிமுக இயக்குனர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவரும் அசராமல் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.  அறிமுக இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் நடித்துள்ள படம்தான் ‘கீ’. இப்படத்தில் ஜீவாவுடன் நிக்கி கல்ரானி, அனைகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

அனிஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ‘கலகலப்பு 2’ படமும் பிப்ரவரி மாதமே வெளிவரவிருக்கிறது என்று படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் ‘கலகலப்பு 2’ படத்தை விட ‘கீ’ படத்தின் வெற்றியே ஜீவாவிற்கு முக்கியம். காரணம் ‘கீ’யில் அவர் தனி ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால் ‘கலகலப்பு 2’ வில் அவருடன் ஜெய், மிர்ச்சி சிவாவும் நடித்துள்ளதால் வெற்றியே பெற்றாலும் அது பகிரப்படும் வெற்றியாகத்தான் இருக்கும்.

You might also like More from author

%d bloggers like this: