‘’கமலும் ரஜினியும் எனது இரு கண்கள்’’ – வைரமுத்து

கமல்ஹாசன் ‘’தான் அரசியலுக்கு வந்துவிட்டேன்’’ என்று கூறியதோடு ‘’விரைவில் கட்சி ஆரம்பிப்பேன்’’ என்று உறுதியாக சொல்லிவிட்டார். அதேபோல் ரஜினிகாந்தும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று ‘’நான் அரசியலுக்கு வருகிறேன். வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு அவகாசம் இல்லை. எனவே அதில் போட்டியிடவில்லை. அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலின் போது, சொல்லுகிறேன். அதையடுத்து வரப்போகும் சட்டப்பேரவை தேர்தலில், 234 தொகுதிகளிலும் நம் படை போட்டியிடும்’’ என்று ரசிகர்களிடம் அறிவித்தார் ரஜினி.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்துக்கு வந்திருந்த வைரமுத்துவிடம், கமல் மற்றும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்துக் கேட்டதற்கு, ”கமலும் ரஜினியும் எனக்கு இரண்டு கண்கள். இரண்டு பேருமே எனக்கு நண்பர்கள். இப்போது எதுகுறித்தும் சொல்லமுடியாது. அதற்கான கால அவகாசம் வேண்டும். அதன் பிறகு சொல்லுகிறேன்” என்று தெரிவித்தார் வைரமுத்து.

You might also like More from author

%d bloggers like this: