சற்குணம் இயக்கும் ஹாலிவுட் ஸ்டைல் படத்தில் மாதவன்

‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ படங்களின் அமோக வெற்றிகளுக்குப் பிறகு மிகக் கவனமாக கதைகளை கேட்டு வந்தார் மாதவன். இந்நிலையில் ‘களவாணி’ சற்குணம் சொல்லிய கதை ஒன்று மிகவும் பிடித்துப் போக ஓகே சொல்லிவிட்டார் மாதவன். இந்தப் படம் முழுக்க வெளிநாடுகளிலும், அடர்ந்த காடுகளுக்குள்ளும் இப்படத்தை உருவாகவிருக்கிறது. கணேஷ் தயாரிக்கவுள்ளார்.

இப்படம் குறித்து சற்குணம் கூறும்போது,

‘’இந்தப் படம் காடுகளில் நடக்கும் கதையை மையப்படுத்தியது. தாய்லாந்து, மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் ஹாரி பாட்டர் அண்ட் டெத்லி ஹாலோஸ் பார்ட் 2′ மற்றும் ட்ராகுலா அண்டோல்டுபடங்களில் பணியாற்றிய ஹாலிவுட் சண்டைக்கலைஞர் க்ரே பரிட்ஜ் பணியாற்றுகிறார்.

இது வேதாளம் சொல்லும் கதைபடத்தின் இயக்குனர் ரதிந்திரன் தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடந்து வருகிறது. சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து குழந்தைகள் ரசிக்கும் விதமாகவும் படமாக்க இருக்கிறோம். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது’’ என்றார்.

You might also like More from author

%d bloggers like this: