குடியரசு தினத்தில் உதயநிதி ஸ்டாலினின் ‘நிமிர்’

தொடர் தோல்விகளால் துவண்டிருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் அவர் நடித்து வெளிவரவிருக்கும் ‘நிமிர்’ படத்தின் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படம் மலையாளத்தில் ஃபஹத் பாசில் நடித்து வெற்றி பெற்ற ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் ரீமேக் ஆகும்.

உதயநிதி ஸ்டாலினுடன் நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, இயக்குநர் மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  தமிழ் ரீமேக்கிற்கு சமுத்திரக்கனி வசனம் எழுதியுள்ளார். தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளார்கள். இதன் இறுதிகட்டப் பணிகள் முடிவடைந்து தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. முதலில் பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ‘நிமிர்’.

You might also like More from author

%d bloggers like this: