கே.வி.ஆனந்த் படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக அமிதாப் பச்சன்

‘அயன்’, ‘மாற்றான்’ என இரண்டு படங்களை சூர்யாவை வைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த். இதில் ‘அயன்’ மெகா ஹிட்டானது. ‘மாற்றான்’ தோல்வியடைந்தது. இந்நிலையில் மீண்டும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. ‘தானா சேர்ந்த கூட்டம்’ தெலுங்கு டப்பிங்கான ‘கேங்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சூர்யாவே இதனை உறுதி செய்தார்.

அதேபோல இப்படத்தில் எழுத்தாளர்கள் சுபாவிற்கு பதில் பட்டுக்கோட்டை பிரபாகர் கதை, திரைக்கதை, வசனத்தில் பங்கேற்கிறார். இதில் சூர்யாவிற்கு வில்லனாக அமிதாப் பச்சனை நடிக்க வைக்க கே.வி.ஆனந்த் முயற்சித்ததாகவும், அமிதாப் பச்சனும் சம்மதித்து விட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இன்னும் சில நாட்களில் உண்மை நிலவரம் தெரிய வரும்.  

You might also like More from author

%d bloggers like this: