கமல்ஹாசனுடன் கை கோர்க்கும் விக்ரம்

உலக நாயகன் கமல்ஹாசனைப் போலவே படத்திற்குப் படம் தன் உடலை வருத்தி வித்தியாசமாக நடித்துப் புகழ் பெற்றவர்தான் சீயான் விக்ரம். இப்போது கமல்ஹாசனுடன் கை கோர்க்கிறார் விக்ரம். ஆனால் இதில் ஹீரோ கமல் இல்லை. விக்ரம்தான். கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக விக்ரமை வைத்துப் படம் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தை இயக்கப்போவது ‘விஸ்வரூபம்’, ‘உத்தம வில்லன்’ படத்தின் இணை இயக்குனரும், கமல் நடித்த ‘தூங்காவனம்’ படத்தின் இயக்குனருமான ராஜேஷ் எம் செல்வா. ‘ஸ்லீப்லெஸ் நைட்’ என்ற பிரெஞ்சு படத்தின் ரீமேக்கை தூங்காவனமாக இயக்கினார். தற்போது ஒரு கொரிய படத்தின் ரீமேக்கைத்தான் விக்ரம் படமாக இயக்குகிறாராம்.

You might also like More from author

%d bloggers like this: