‘’தல படத்திற்காக ஆக்ரோஷமான பின்னணி இசை தருவேன்’’ – விக்ரம் வேதா இசையமைப்பாளர் உற்சாகம்

வீரம், வேதாளம், விவேகம் என்று தொடர்ந்து மூன்று படங்களில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்தார். இதில் வீரம், வேதாளம் ஹிட்டடிக்க, விவேகம் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. நஷ்ட ஈட்டிற்காக சத்யஜோதி நிறுவனத்திற்கு மீண்டும் அஜித்தும், சிவாவும் விஸ்வாசம் படத்தை எடுக்க இருக்கின்றனர். இதில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கம்போசிங் கூட நடைபெற்றது. ஆனால் திடீரென படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் யுவன்.

இந்நிலையில் விக்ரம் வேதா இசையமைப்பாளர் சி.எஸ்.சாம்தான் விஸ்வாசம் படத்தின் இசை என்று தகவல் வர, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். ஆனால் சாம் தனது டிவிட்டரில் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

“தொடர்ந்து வரும் வாழ்த்துக்களால் திக்குமுக்காடி போயிருக்கிறேன். பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் நான் ‘விசுவாசம்’ படத்தில் இருக்கிறேனா என்பது எனக்கே தெரியாது. நான் பெரிய தல ரசிகன். கண்டிப்பாக எதிர்காலத்தில் தலயின் படத்துக்கு இசையமைப்பேன், ஆக்ரோஷமான பின்னணி இசை தருவேன். காத்திருங்கள், ஒரு சிறப்பான செய்தி வரவிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

You might also like More from author

%d bloggers like this: