‘’நீங்கள் தேட வேண்டியது தலைமையை அல்ல திறமையை’’ – பன்ச் வைத்த கமல்

மலேசியாவில் நட்சத்திர கலை விழாவில் அஜித், விஜய்யை தவிர ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விஷால், கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஆர்யா என மற்ற எல்லா ஹீரோக்களும் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேச முடிவை அறிவித்த பிறகு முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணைந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசும்போது, ‘‘நடிகர் சங்கத்துக்காகவும், அதன் ஆக்கப் பணிகளுக்காகவும் இளம் நடிகர்கள் சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்கள். நடிகர் சங்கத்துக்கு தனியாக ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அந்த கனவு வெகு விரைவில் நிஜமாகப் போவதில் மகிழ்ச்சி’’ என்றார்.

கமல் அதற்குப் பின் பேசியதுதான் ஹைலைட். ‘’என்னை பேச வைத்து கொண்டிருக்கும் குரல் எல்லாம் மக்களின் குரல் தான். நீங்கள் தேட வேண்டியது தலைமையை அல்ல, திறமையை’’ என அவர் செம பன்ச் ஒன்றை வைத்துத் தன் பேச்சை முடித்தார் கமல்ஹாசன்.

You might also like More from author

%d bloggers like this: