சூர்யா செல்வராகவன் படத்தில் மீண்டும் ரகுல் ப்ரீத் சிங்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் செல்வராகவன். தற்போது இவர் இயக்கி முடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘மன்னவன் வந்தானடி’ படங்கள் ரிலீசிற்கு ரெடியாக உள்ளன. இநிலையில் சூர்யா இயக்கும் படத்தை இயக்குகிறார் செல்வராகவன். இந்தப் படத்தின் பூஜை புத்தாண்டு தினம் போடப்பட்டது. இதில் சிவகுமார் கலந்துகொண்டு செல்வராகவனை வாழ்த்தினார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படம் ‘சூர்யா 36’ என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் பொங்கல் அன்று துவங்கப்படுகிறது. ஒளிப்பதிவாளராக ‘இறுதிச் சுற்று’, ‘இறைவி’ படங்களில் பணிபுரிந்த சிவகுமார் விஜயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தின் ஹீரோயினாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் ரகுல் ப்ரீத் சிங். இடையில் என்ன நடந்ததோ திடீரென சாய் பல்லவி ஹீரோயினாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்நிலையில் மீண்டும் இன்னொரு ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரகுல் ப்ரீத் சிங் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் வெற்றியின் மூலம் தான் ராசியான ஹீரோயின்தான் என்பதை நிரூபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author

%d bloggers like this: