‘உள்குத்து’ – விமர்சனம்

‘திருடன் போலீஸ்’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த தினேஷ், கார்த்திக் ராஜூ கூட்டணியில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம்தான் ‘உள்குத்து’. முந்தைய படத்தில் போலீஸ் படும் துன்பங்களை அழகாகக் கையாண்டு கதை சொன்னவர் ‘உள்குத்து’வில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

கதை

மீனவ குப்பத்தில் ரவுடி போல் தன்னை உதார் விட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பால சரவணனை ஒரு பிரச்சனையில் இருந்து தினேஷ் காப்பாற்ற, இருவரும் நட்பாகிறார்கள். பால சரவணின் வீட்டிலேயே தங்கி விடுகிறார் தினேஷ். பால சரவணனின் தங்கையான நந்திதாவை பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார் தினேஷ்.

இந்நிலையில் மிகப்பெரிய ரவுடிகளான சரத் லோகிதஸ்வாவும்,  திலீப் சுப்ராயனும் அப்பா மகன். அந்த ஊரில் கந்து வட்டி தொழில் செய்து, ரவுடியிசம் செய்து வருபவர்கள். ஒரு நாள் திலீப் சுப்பராயனின் வலது கையாக இருக்கும் ஒருவரை, ஒரு பிரச்சனையில் தினேஷ் அடிக்கிறார். இதனால் திலீப் சுப்ராயனின் பகையை சம்பாதிக்கிறார் தினேஷ். இந்த பகையால் வரும் சண்டையில் திலீப் சுப்ராயனையும் அடித்து விடுகிறார் தினேஷ். இதனால் ரவுடி சரத் லோகிதஸ்வா, தினேஷை கொல்ல நினைக்கிறார். ஆனால், தினேஷ் சமாதானம் பேசி திலீப்பிடம் நண்பராகி விடுகிறார். பின்னர் ஒரு நாளில் திலீப் சுப்ராயனை கொலை செய்து விடுகிறார்.

நண்பனான திலீப்பையே தினேஷ் ஏன் கொன்றார் என்பதே மீதிக்கதை.

படத்திற்குப் படம் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் தினேஷ் இந்தப் படத்தையும் அப்படித்தான் தேர்வு செய்திருக்கிறார். ஆனால் வழக்கமான அதே வன்முறை தூக்கல் இதிலும் உள்ளன.

நந்திதா தினேஷை காதலிக்கும் வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின். ஆனால் கச்சிதமான நடிப்பு.

படத்தின் பெரிய பலமே பாலசரவணன்தான். அவர் அடிக்கும் லூட்டிகள் படத்திற்கு செம எனர்ஜி.

இரண்டாம் பாதியில் வரும் சாயா சிங் கதைக்குத் தேவைப்பட்டிருக்கிறார்.

அப்பா மகனாகவே வாழ்ந்து மிரட்டியிருக்கிறார்கள் சரத் லோகிதஸ்வா.

ஸ்ரீமன், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், செஃப் தாமோதரன் ஆகியோர் அவ்வப்போது கலகலக்க வைக்கிறார்கள்.

‘திருடன் போலீஸ்’ படத்தில் தந்தை மகன் பாசத்தை அடிப்படையாக வைத்த இயக்குனர் கார்த்திக் ராஜு இதில் அக்கா தம்பி பாசத்தை அடிநாதமாக வைத்து கதை சொல்லியிருக்கிறார். வழக்கமான மசாலா கதைக்கு ஓரளவு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்துள்ளார்.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையும், வர்மாவின் ஒளிப்பதிவும் லேட்டான படம் என்பதை எந்த இடத்திலும் நினைவூட்டாத சிறப்பான பங்கை ஆற்றியிருக்கின்றன.

மொத்தத்தில்

‘உள்குத்து’ – நல்ல பஞ்ச்.

You might also like More from author

%d bloggers like this: