‘பலூன்’ – விமர்சனம்

காதலர்கள் என்று கிசுகிசுக்கப்படும் ஜெய், அஞ்சலி இணைந்து நடித்திருக்கும் படம்தான் ‘பலூன்’. ஜனனி ஐயர், யோகி பாபு நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சினீஷ் இயக்கியுள்ளார்.

கதை

எப்படியாவது சினிமா இயக்குனராகத் துடிக்கும் ஜெய் ஒரு தயாரிப்பாளரிடம் கதை ஒன்று சொல்ல, அதனை கேட்ட தயாரிப்பாளர் ‘’இந்தக் கதை வேண்டாம். ஏதாவது ஹாரர் கதை இருந்தால் கொண்டு வா. உடனே படம் ஆரம்பிக்கலாம்’’ என்று சொல்கிறார். உடனே ஜெய் தன் ஆசை காதல் மனைவியான அஞ்சலியுடனும், தனது உதவியாளர்கள் யோகி பாபுவுடனும் பேய் இருப்பதாகச் சொல்லப்படும் வீடு இருக்கும் ஊட்டிக்குச் செல்கிறார்.

அங்கு சென்று பேய் வீடு பற்றி விசாரிக்க துவங்குகிறார். பின்னர் சில நாட்களில் ஜெய் தங்கியுள்ள வீட்டுக்குள்ளேயே அமானுஷ்யமாக சில விஷயங்கள் நடக்கின்றன. அங்கு பேயாக இருப்பது யார்…? அவர்கள் பின்னணி என்ன…? அவர்களிடம் இருந்து தப்பி ஜெய் தன் கதையை எழுதி முடித்து படமாக்கினாரா இல்லையா என்பதே மீதிக்கதை.

நீண்ட நாளைக்குப் பிறகு வந்திருக்கும் ஜெய் படம். இயக்குனராக முயற்சி எடுக்கும் கேரக்டரில் கச்சிதமாகப் பொருந்துகிறார். அஞ்சலியை அள்ளுகிறார்.

அழகுப் பதுமையாக அஞ்சலி படம் முழுவதும் மெருகேறி கும்மென்று இருக்கிறார். ஆனாலும் நடிப்பில் அசத்தல்தான்.

யோகி பாபுவால்தான் முதல் பாதியே சலிப்பில்லாமல் நகர்கிறது என்று சொல்லலாம். அந்தளவுக்கு அவரின் காமெடி பேய்ப் படம் என்பதையும் மீறி சிரிக்க வைத்துவிடுகிறது.

ஜனனி ஐயருக்கு முக்கிய வேடம்தான்.

அறிமுக இயக்குனர் சினீஷ் டைட்டிலேயே இந்த ஆங்கிலப் படங்களிலிருந்துதான் சுட்டிருக்கிறேன் என்று ஒப்புக் கொண்டாலும் முதல் பாதி ஏன் அவ்வளவு இழுவை. இரண்டாம் பாதியில் வேகமெடுக்கும் கதை மீண்டும் இறங்கிவிடுகிறது. ஆனாலும் மேக்கிங்கில் மிரட்டிவிட்டார் சினீஷ்.

யுவன் ஷங்கர் ராஜா இசையிலோ ஒரே ஒரு பாடல் மட்டும்தான் கேட்கும் அளவிற்கு இருக்கிறது.

ஹாலிவுட் தர ஒளிப்பதிவு.

மொத்தத்தில்

‘பலூன்’ – பறக்கிறது.

You might also like More from author

%d bloggers like this: