‘’தானா சேர்ந்த கூட்டம் ஸ்பெஷல் 26 ரீமேக்தான்’’ – ஒப்புக் கொண்ட விக்னேஷ் சிவன்

‘நானும் ரௌடிதான்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இப்படம் ‘ஸ்பெஷல் 26’ ரீமேக் என்று ஆரம்பத்திலிருந்தே பல ரசிகர்கள் சொல்ல, அதற்கு சூர்யா ரசிகர்கள் மறுப்புத் தெரிவித்தனர். ஆனால் படத்தின் டீசரிலேயே இது அப்பட்டமாக ‘ஸ்பெஷல் 26’ படத்தை ஒத்திருந்தது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இது பற்றிய உண்மையை வாய் திறந்து சொல்லிவிட்டார்.

‘’நானும் ரௌடிதான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியை வைத்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கவிருந்தேன். ஆனால் தேதிகளில் சில சிக்கல். அதனால் விஜய் சேதுபதி ‘கவண்’ படத்திற்கு போய்விட்டார். அப்போது ஞானவேல்ராஜா படம் செய்ய கூப்பிட்டார். நேரமில்லாததால் ‘ஸ்பெஷல் 26 படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்துவிட்டேன். ஆனால் இப்படத்தை என்னுடைய ஸ்டைலில் எடுத்துள்ளேன். மேலும் ஒரு முக்கிய சம்பவமும் இடம் பெறும். ‘சொடக்கு’ பாடல் இப்படத்திற்காக உருவாக்கப்பட்டது. இதைப்போல ‘ஸ்பெஷல் 26 ல் இல்லை. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியான ஒரு பொழுதுபோக்கான படமாக இருக்கும்’’ என கூறியுள்ளார்.

You might also like More from author

%d bloggers like this: