‘சென்னை 2 சிங்கப்பூர்’ – விமர்சனம்

திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் கோகுல் ஆனந்த், தனது நண்பன் உதவியுடன் சிங்கப்பூரில் இருக்கும் தயாரிப்பாளரை சந்திக்கச் செல்கிறார். ஆனால், அந்தத் தயாரிப்பாளர் திடீரென விபத்தில் சிக்க, அதனால், தவிக்கும் கோகுல், பாஸ்போர்ட்டையும் தொலைத்துவிட, அந்த சமயத்தில் சிங்கப்பூரில் வசிக்கும் டிவி ஒன்றின் ஒளிப்பதிவாளரான ராஜேஷ் பாலச்சந்திரன், கோகுலுக்கு உதவி செய்து அவருடனேயே தங்க வைக்கிறார். 

கோகுலுக்கு நண்பனாகும் ராஜேஷ், கோகுலுக்கு வேறு தயாரிப்பாளரை சந்திக்க வைக்கிறார். அதே சமயம், பாஸ்போர்ட் அலுவலகத்தில் அஞ்சு குரியன்-ஐ சந்திக்கும் கோகுல், அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால், அந்த காதலை அஞ்சு ஏற்க மறுக்கிறார். கோகுல் ஆனந்த், படம் இயக்கினாரா, காதலியைக் கைப்பிடித்தாரா என்பது தான் படத்தின் மீதிக் கதை. 

கோகுல் ஆனந்த். இயக்குனராகும் கனவோடு வாழும் கதாபாத்திரத்தில் இயல்பாய் நடித்து ரசிக்க வைக்கிறார்.

படத்தின் கலகலப்புக்குக் காரணமாக இருப்பவர் ராஜேஷ் பாலச்சந்திரன். தமிழ் சினிமாவில் முயற்சித்தால் பல கதாபாத்திரங்களில் நடிக்கலாம்.

தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு அழகான வரவு அஞ்சு குரியன்.  உள்ளுக்குள் அவ்வளவு பெரிய சோகத்தையும், கஷ்டத்தையும் மறைத்து வைத்துக் கொண்டு இருக்கும் கதாபாத்திரம்.

ஜிப்ரான் இசை கொண்டாட்டம்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்ல முத்து சிங்கப்பூரின் அழகை துளி கூட தவறாமல் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார். 

எந்த ஒரு டிவிஸ்டும் இல்லாமல் தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதையோடு கலகலக்க வைத்துள்ளார் அக்பர் அலி.

மொத்தத்தில்

‘சென்னை 2 சிங்கப்பூர்’ – ஜாலி டூர்.

You might also like More from author

%d bloggers like this: