‘சத்யா’ – விமர்சனம்

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ‘சைத்தான்’ படத்தில் இயக்குனராக அறிமுகமாகிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இரண்டாவது படம். ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஜாக்சன் துரை’ படங்களின் வெற்றிக்குப் பிறகு சிபி சத்யராஜ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்தான் ‘சத்யா’. ‘ஷணம்’ என்ற மெகா ஹிட் தெலுங்கு படத்தின் ரீமேக் இது.

கதை

சென்னையில் உள்ள ஐ.டி.கம்பெனியில் வேலை செய்யும் ரம்யா நம்பீசன், குழந்தையுடன் காரில் செல்லும் போது சில மர்ம நபர்களால் தாக்கப்படுகிறார். பின் அந்த மர்ம நபர்கள் கரையும், குழந்தையையும் கடத்திக்கொண்டு போகின்றனர்.  காவல் நிலையத்துக்குப் போய் கதறும் ரம்யாவை அலட்சியப்படுத்தும் போலீஸ், ‘நடந்தது கார் கடத்தல் தானே தவிர, குழந்தை கடத்தல் இல்லை!என சொல்லி அந்த கேஸை குளோஸ் செய்கிறது. அத்துடன், அப்படியொரு குழந்தையே தங்களுக்கு பிறக்கவில்லை என்றும், விபத்தில் ரம்யாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதால் அவர் பிதற்றுகிறார்என்றும் கணவரே வாக்குமூலம் தருகிறார்.

இந்நிலையில், வெளிநாட்டில் இருக்கும் தன் முன்னாள் காதலன் சிபிராஜ் உதவியை நாடுகிறார் ரம்யா. இதற்காக சென்னை வரும் சிபிராஜ், குழந்தை கடத்தல் பின்னணியில் இருக்கும் மர்ம முடிச்சை எப்படி அவிழ்க்கிறார் என்பது மீதிக் கதை.

ரீமேக் படம் என்றாலே சில ரிஸ்க்குகள் இருக்கத்தான் செய்கின்றன. சில படங்கள் அந்த மாநில மொழியினருக்கு வேண்டுமானால் ஒத்து வரலாம். ஆனால் இங்கே எடுபடுவது கடினம். அதேபோல் குறிப்பிட்ட அளவுக்கு மேல் மாற்றமும் செய முடியாது. சத்யாவிற்கும் இதே பிரச்சினைதான். குழந்தை கடத்தலை கண்டுபிடிக்க வரும் சிபிராஜின் துப்பறியும் காட்சிகள் மிக மிக சாதாரணமானவை. முதல் பாதியில் ஜவ்வென இழுக்கும் திரைக்கதை நம்மை கொட்டாவி விட வைக்கிறது.

இரண்டாவது பிரச்சினை. கதாப்பாத்திர தேர்வும், அவர்களின் செயற்கையான நடிப்பும். இயல்புத் தன்மை தவறும்போதே படத்தில் ஒன்ற முடியாமல் போகிறது.

சிபி சத்யராஜ். ஜாலி காதலன், சீரியஸ் துப்பறியும் இளைஞன் என்று இருவேறு பரிமாணங்கள். ஜஸ்ட் பாஸ் தான் செய்கிறார்.

ரம்யா நம்பீசனின் நிரம்பி வழியும் அழகு நம்மை மூச்சுத் திணற வைக்கிறது. நன்றாகவே நடித்திருக்கிறார்.

வரலக்ஷ்மி, யோகி பாபு, ஆனந்த ராஜ், சதீஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

சைமன் கே கிங் பின்னணி இசை மிரட்டல். பாடல்கள் ஓகே ரகம்.

மொத்தத்தில்

‘சத்யா’ – சுமார் த்ரில்லர்.

You might also like More from author

%d bloggers like this: