பிரபல இசையமைப்பாளர் ‘அமரன்’ புகழ் ஆதித்யன் காலமானார்

9௦ களின் ஆரம்பத்தில் இளையராஜா தனது இசை ராஜாங்கத்தால் உச்சத்தில் இருந்த சமயம், ஏ.ஆர்.ரஹ்மான் என்ற புதிய இசைப்புயலின் இசையில் ரசிகர்கள் மயங்கிக் கிடந்த காலம். இந்த சமயத்தில்தான் கார்த்திக் நடிப்பில் கே.ராஜேஸ்வர் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட்டான ‘அமரன்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்வசப்படுத்தியவர்தான் ஆதித்யன். அதற்கடுத்து ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தின் அற்புதமான பாடல்களை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இவர் நேற்று ஹைதராபாத்தில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். 63 வயதான ஆதித்யன் ‘லக்கி மேன்’, ‘மாமன் மகள்’, ‘அசுரன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ என பல படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author

%d bloggers like this: