மீண்டும் இணையும் ‘வேட்டைக்காரன்’, ‘சுறா’ கூட்டணி – திகிலில் விஜய் ரசிகர்கள்

விஜய்யின் திரையுலக வரலாற்றிலேயே கசப்பான நாட்கள் என்றால் விஜய் தொடர்ந்து ‘அழகிய தமிழ் மகன்’, ‘குருவி’, ‘வில்லு’ என தோல்விப் படங்களை கொடுத்த காலகட்டம்தான். இந்தப் படங்களின் தோல்விகளை எல்லாம் ஓரங்கட்டும் வகையில் அமைந்தன ‘வேட்டைக்காரன்’, ‘சுறா’ படங்களின் வரலாறு காணாத தோல்விகள். இந்த இரண்டு படங்களையும் வெளியிட்டது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான்.

இந்நிலையில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளது சன் பிக்சர்ஸ். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் மூலம்தான் மீண்டும் சன் பிக்சர்ஸ் களமிறங்குகிறது.

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில், “விஜய்யின் 62-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது” என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் மற்றும் கலை இயக்குநராக சந்தானம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்த் வருகிறது.

You might also like More from author

%d bloggers like this: