விஷால் வேட்புமனு நிராகரிப்பு – ராதாரவி, ராதிகா சரத்குமார் கொண்டாட்டம்

விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் மிகுந்த சந்தோசத்தில் உள்ளார்கள் ராதாரவி, சேரன், ராதிகா சரத்குமார் போன்றவர்கள். இவர்கள் எல்லாம் நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலிடம் படுதோல்வியடைந்து பல்பு வாங்கியவர்கள். அந்த சந்தோஷத்தின் வெளிப்பாடாக ராதாரவி நேற்று ஒரு தொலைக்காட்சி சேனலில் விஷால் ஒரு கோமாளி என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதேபோன்று தனது டிவிட்டர் பதிவில் நடிகை ராதிகா சரத்குமாரும் தனது அளப்பறிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

‘’மக்களுக்காக உழைப்பேன், ஊழலை எதிர்ப்பேன் என்று சொன்ன வார்த்தைகளுக்குப் பின் இருக்கும் உண்மையான பச்சோந்தியை மக்கள் இப்போது பார்க்கிறார்கள். அதுவும் கையெழுத்தில் மோசடி என்பதற்காக. உண்மையான வண்ணத்தை அனைவரும் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது’’ என்று அதில் கூறியுள்ளார்.

You might also like More from author

%d bloggers like this: