வேட்புமனு நிராகரிப்பு – ‘’வழக்கு தொடர்வேன்’’ விஷால் ஆவேசம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் திடீரென தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் விஷாலை முன் மொழிந்த 10 பேரில் 2 பேர் தகவல்கள் சரியாக இல்லாத காரணத்தால் வேட்புமனுவை நிராகரிப்பதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த விஷால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தார். பிறகு போலீஸ் அதிகாரி விஷாலை சமாதானப்படுத்தி, மீண்டும் தேர்தல் அதிகாரியை சந்திக்க வைத்தார்.

அப்போது விஷால் தனது ஆட்கள் மிரட்டப்பட்டார்கள் என்று கூறி, பதிவு செய்யப்பட்ட ஆடியோவை அவரிடம் கேட்க வைத்தார். அப்போது உடனே தேர்தல் அதிகாரி விஷாலின் வேட்புமனுவை ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். அதற்கு விஷாலும் நன்றி கூறிவிட்டுக் கிளம்பினார். அவர் கிளம்பிய சிறிது நேரத்தில் மீண்டும் தேர்தல் அதிகாரி விஷால் தந்த ஆடியோ பதிவு போதுமான ஆதாரம் இல்லை என்றும், மிரட்டப்பட்டவர்கள் நேரில் விசாரிக்கப்பட்டதன் அடிப்படையிலும் விஷாலின் வேட்புனுவை நிராகரிப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த விஷால் தேர்தல் ஆணைய தலைமை அதிகாரியிடம் முறையிட போவதாவும், வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தார்.

You might also like More from author

%d bloggers like this: