அஜித்தின் ‘விஸ்வாசம்’ இணையும் நிவின் பாலி உற்சாகத்தில் ‘தல’ ரசிகர்கள்

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என்று தொடர்ந்து மூன்று படங்களில் நடித்த அஜித் தற்போது நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம்தான் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தை ‘விவேகம்’ படத்தின் தோல்வியால் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கே இயக்குகிறார் சிவா. அடுத்த வருட தீபாவளிக்கு முருகதாஸ் விஜய் கூட்டணியோடு மோதப்போகும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த சூழலில் ‘விஸ்வாசம்’ படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ‘நேரம்’, ‘ப்ரேமம்’ படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நிவின் பாலி இணையவுள்ளார் என்ற செய்தியால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஆனாலும் இந்தப் படத்தில் நிவின் பாலி நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இதுவரைக்கும் வரவில்லை.

You might also like More from author

%d bloggers like this: