‘’இந்த ஒரு காரணத்திற்காகவே இனி எந்த விளம்பரங்களிலும் நடிக்க மாட்டேன்’’ – சிவகார்த்திகேயன் உறுதி

‘தனி ஒருவன்’ என்ற மெகா ஹிட் படத்திற்குப் பிறகு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘வேலைக்காரன்’. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன்

எனக்குள் இருக்கும் மனிதனிடம், இப்படம் நிறைய கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அதன் மூலம் சிறிது மாறியிருக்கிறேன். 9 படம் சந்தோஷப்படுத்துவதற்காக நடித்தேன் என்றால் 1 படம் கருத்து சொல்லும் படமாக நடிப்பேன். கீழ்தட்டு மக்கள் இருக்கும் நிலை மாற வேண்டும் என நினைக்கிறோம். அவர்களுடைய கேள்விகள், வலிகள், தேவையான நியாயங்கள், ஆசைப்படும் விஷயங்கள் என அனைத்துமே கிடைக்ககிறதா, நடக்கிறதா என்பது தான் ‘வேலைக்காரன்’.

எனக்கு கிடைத்திருக்கும் இடம், கார், வீடு அனைத்துமே மக்கள் கொடுத்தது தான். அவர்களுக்கு என்ன திருப்பிக் கொடுப்பது என்று தெரியவில்லை. அப்படி ஏதாவது திருப்பிக் கொடுக்க முடியும் என்றால் அது இந்த ‘வேலைக்காரன்’ படமாக இருக்கும் என நினைக்கிறேன். இப்படத்தில் சில காட்சிகள் நடிக்கும்போது கண் கலங்கியிருக்கிறேன். இதற்கு முன்பு சில விளம்பரங்களில் நடிப்பதை தவிர்த்திருக்கிறேன். அதற்கு அந்தத் தருணத்தில் சந்தோஷப்பட்டேன். இப்போது சொல்கிறேன், இனிமேல் எந்த விளம்பரங்களிலும் நடிக்கப் போவதில்லை. ஏன் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது’’ என்று நெகிழ்வாகப் பேசினார்.

You might also like More from author

%d bloggers like this: