”விஷால் ஜெயிப்பது உறுதி” – பிரபல இயக்குனர் ஆருடம்

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தற்போது திடீரென ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதற்கு பல்வேறுத் தரப்பிலிருந்து ஆதரவும், எதிர்ப்பும் மாறி மாறி எழுந்தாலும் ஆதரவே அதிகமாக இருக்கின்றன.

இந்நிலையில் விஷாலுக்கு ஆதரவாக இயக்குனர் சுசீந்திரன் தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் என்று கூறியிருந்தார். அதுபற்றி நீண்ட விளக்கத்தை தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் விஷால் சாருக்கு எனது வாழ்த்துகள். விஷால் சார் நடிகர் சங்க தேர்தல்ல நிற்கும் போதும், தயாரிப்பாளர் சங்க தேர்தல்ல நிற்கும் போதும் 100% அவர் தோத்துருவார்னுதான் எல்லோரும் நினைத்தார்கள். அவரோட உழைப்பும், உண்மையும் அந்த நினைப்பைப் பொய்யாக்கி விஷால் சார் ஜெயிச்சார். இந்த தேர்தலிலும் விஷால் சார் ஜெயிப்பார்னு நான் நம்புறேன். விஷால் சாருக்கு வாழ்த்துகள். விஷால் சாருக்காக நான் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பணம் வாங்காமல் ஓட்டு போடும் மக்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் உணர்த்தும். கண்டிப்பாக இந்த கடிதத்தைப் பார்த்தால் குற்றம் மட்டுமே கண்டுபிடிக்கும் பரம்பரை சேர்ந்தவன் நீ பிரச்சாரம் செய்தால் எவன்டா ஓட்டு போடுவான்னு கேப்பானுங்க‘. எனக்கு எல்லா ஊர்களிலும் தம்பிமார்கள் இருக்கிறார்கள். மாற்றம் வராதா என்ற ஏக்கத்துடன் அந்த தம்பிகள் எனக்காக விஷால் சாருக்கு ஓட்டு போடுவாங்க.

தமிழ்என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்யாமல், நல்லவன் எவன் வந்தாலும் நமக்கு நல்லது. விஷால் உண்மைக்கும் நல்லவன். அரசியல் மாற்றம் வேணும்னு நினைக்கிறவன் விஷால் சாருக்கு ஓட்டு போடுங்க. மக்களுக்காக உண்மையாக உழைப்பார். இது என் கருத்துஎன்று சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

You might also like More from author

%d bloggers like this: